வீழ்ந்த உலங்கு வானூர்தியை மீட்டெடுத்த இலங்கை விமானப்படை!!

721

 
காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த எம்.ஐ-17 உலங்குவானூர்தியை இலங்கை விமானப்படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென் மாகாணம் முழுவதும் பெய்த கன மழையினால் வெள்ளப்பெருக்கும், மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் வெள்ளத்திற்குள்ளும், மண் சரிவிற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலையில் பறந்து கொண்டிருந்த போது, எம்.ஐ-17 உலங்குவானூர்தியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானி அதனை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்றில் தரையிறக்கினார்.

இதனால் உலங்குவானூர்தி சேதமடைந்தது. இதனையடுத்து பார ஊர்தியில் சென்ற படையினர், உலங்கு வானூர்தியின் பாகங்களை அகற்றிவிட்டு அதனை மீட்டெடுத்துக் கொண்டு சென்றனர்.