திருமண சடங்கில் மணப்பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் கலந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
திருமண நாளுக்காக பெண்கள் தேடி தேடி அலங்கார உடை வாங்கி அணிவதுண்டு. ஆனால் டெல்லியில் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் ஷார்ட்ஸ் அணிந்து வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் மணமகன் சம்பிரதாய உடையும், மணமகள் லெஹெங்கா ஆடையின் சட்டை அணிந்து கீழே ஷார்ட்ஸ், கையில் கோக்குடன் போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர். இணையதளத்தில் இதை பயன்பாட்டாளர்கள் ஏகத்துக்கும் கலாய்த்துள்ளனர்.
சுவையாக நடக்க வேண்டிய திருமணம் இப்படி நகைச்சுவையாக மாறியுள்ளதாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






