விமானத்தில் இருந்து குதித்து தப்பியோடிய பயணிகளால் பதற்றம்!!

648

அவுஸ்திரேலியாவில்  உள்ள விமான நிலயத்தில் உயிர் பயத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலயத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைக்கு சென்ற ஒரு பயணி, அங்கு கிடந்த ஒரு மர்ம கடிதத்தை படித்துப் பார்த்து பதற்றம் அடைந்தார்.

விமானம் ஓடுபாதையில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் கழிப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்த அவர், விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, பெட்டி, படுக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுங்கள் என்று கூச்சலிட்டார்.

இதையடுத்து, நகரும் படிக்கட்டை பொருத்துவதற்கு வசதியாக திறந்திருந்த விமானத்தின் கதவு வழியாக பலர் கீழே குதித்து, பீதியால் அலறிவாறு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக அந்த விமானத்தின் அருகே விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் துல்லியமாக சோதனையிட்டபோது, உள்ளே வெடிப்பொருள் ஏதும் கிடைக்கவில்லை. மேற்கண்ட மிரட்டல் கடிதத்தை எழுதியவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.