இந்திய அணியுடன் வெற்றிபெற திமிருடன் விளையாடுங்கள் : இலங்கை அணிக்கு சங்கக்கார அறிவுரை!!

522

இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 8ம் திகதி ஓவல் மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் இளம் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆக்ரோஷமான முறையில் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்ற இந்தியாவை தோற்கடிப்பது சுலபமில்லை.

அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும், தரங்காவுக்கு இரண்டு போட்டிகளுக்கான தடையும் அணிக்கு பெரும் விரயமாகும் என தெரிவித்துள்ளார்.