வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கைகலப்பால் பதற்றம் : இருவர் வைத்தியசாலையில்!!

706

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.06.2017) காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முதலாம்குருக்கு வீதியில் நின்ற தனியார் பேரூந்தின் ஊழியர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்குள் வந்து அங்கு பணியில் இருந்த இ.போ.ச நேரக்கணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பேரூந்தின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.