யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!

441

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து சபாஷ்நாயுடு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி படம் 9ம் திகதி வெளியாகிறது.

இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன்,

“என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் எடையை அதிகரித்துவிட்டதாக வலைத்தளங்களில் சிலர் கூறி உள்ளனர். இதற்கு பதில் கொடுத்துள்ள ஸ்ருதி, ‘பெஹன் ஹோகி தேரி’ படத்துக்காக எடை அதிகரித்தேன். ஒரு நடிகை எப்போதுமே ஒல்லியாக இருக்க முடியாது. நாங்களும் மனிதர்கள்தான். படத்துக்காக வெயிட்டை அதிகரிப்போம். குறைப்போம். சில நேரங்களில் அது இயற்கையாகவே நடக்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.