இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வட மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை வரும் 7ம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கொழும்பில் சந்தித்து பேசவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் 8ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்வதோடு இவரது இந்த விஜயத்தின் முக்கிய சந்திப்பாக வட மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்கினேஸ்வரனுடனும் கலந்துரையாடவுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.