திருகோணமலை சென்ற இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

455

திருகோணமலையில் புத்தரின் உருவப்படம் பதியப்பட்ட ஆடை அணிந்திருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள நீரூற்று பார்வையிடுவதற்கு சென்ற பெண் ஒருவரினால் அந்த பிதேசத்தில் அசாதாரண நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணை பார்த்த மக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் திருகோணமலை பொலிஸார் நிலைமையை சமாதானப்படுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் புத்தரின் உருவத்துடனான ஆடை அணிந்தால் இலங்கையில் வரவேற்பு உள்ளதாக தான் நம்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பெண்ணின் ஆடையை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.