இலங்கை கலாசாரத்தை பிரதிபலிக்கும் நூதனசாலை நியூயோர்க்கில் திறப்பு!!

409

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நூதனசாலையொன்றை ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜூலியா விஜேசிங்க என்ற 18 வயதுடைய யுவதியொருவரே நூதனசாலையை அங்குள்ள மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நூதனசாலை தொடர்பில் ஜூலியா விஜேசிங்க குறிப்பிடுகையில், இலங்கையின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதைப்போன்று பல கலாச்சார அம்சங்களை சேகரித்து இதனை உருவாக்கியுள்ளேன்.

உண்மையில் சொல்லப்போனால் இது குறித்து நான் பெருமையடைகின்றேன். இவ்வாறானதொரு செயற்பாட்டை எனது அம்மா, அப்பா இல்லாம் செய்ய முடியாது.

நான் இவ்வாறு செய்வதற்கு முயற்சியெடுத்த பெற்றோர்களிடம் கேட்கும் போது நான் வயதில் சிறியவள். இருப்பினும் எனது பெற்றோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நூதனசாலையில் இலங்கையின் சாப்பாட்டு வகைகளையும் அங்கு உண்டு மகிழக்கூடியதாகவுள்ளமை விசேட அம்சமாகும்.