தொலைபேசியை பார்த்தவாறு நடந்த பெண் 6 அடி பள்ளத்தில் வீழ்ந்து காயமடைந்தார்!!

674

 
தனது செல்­லிடத் தொலை­பே­சியை உற்­றுப்­பார்த்­த­வாறு நடந்­து­கொண்­டி­ருந்த பெண்­ணொ­ருவர், 6 அடி பள்­ளத்தில் வீழ்ந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில்  இடம்­பெற்­றுள்­ளது.

நியூ ஜேர்ஸி மாநி­லத்தின் பிளெய்ன்பீல்ட் நக­ரி­லுள்ள வீதியின் நடை­பா­தையில் 67 வய­தான பெண் ணொருவர் தனது செல்­லிடத் தொலை பேசிக்கு வந்த தக­வலை வாசித்­த­வாறு நடந்­து­கொண்­டி­ருந்தார்.

அந்த நடை­பா­தைக்கு குறுக்­காக கட்­ட­ட­மொன்றின் கீழ் தளத்­துக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த திறந்த கதவை அப்பெண் அவ­தா­னிக்­க­வில்லை.

இதனால், அக்­க­தவில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக மோதிய அப்பெண் 6அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அப்பெண், ஆபத்­தான நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

உள்ளூர் பொது­மக்கள் பாது­காப்புப் பணிப்­பாளர் கார்ல்ட் ரீலி இது தொடர்­பாக கூறு­கையில், “வாகனம் செலுத்தும் போது தொலை­பேசி ஊடாக தக­வல்­களை பரி­மா­று­வது நல்­ல­தல்ல என எண்­ணி­யி­ருந்தேன். இப்போது, நடந்துகொண்டு இவ்வாறு தகவல்களை பரிமாறுவதும் நல்லதல்ல” என்றார்.