பம்பலப்பிட்டி, வஜிர வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
15 வயதுடைய சிறுவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்தி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்புள்ள சந்தியில் இருந்து அதிக வேகத்தில் வந்த இந்த கார் வஜிர வீதியில் வைத்து வலதுபுறமாக திரும்பியுள்ளதுடன் வீதியில் இருந்த மின் விளக்கு கம்பம் ஒன்றையும் தேசப்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்புடைய இந்த சிறுவனே குறித்த புதிய காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிற பென்ஸ் கார் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், காரை ஓட்டிச் சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் மற்றும் வாகனத்தை விடுவிக்குமாறு கோரி சில உயர் அதிகாரிகளிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகளை பொலிஸாருக்கு வந்தள்ளது. எனினும் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கவில்லை என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் விபத்து குறித்து சிறுவனின் பெற்றோரிடம் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.






