மலிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை!!

696

இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேசியதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக் குழு மலிங்கவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகர சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சரியான உடல் தகுதியுடன் இல்லை என விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இலங்கை வீரர் லசித் மலிங்க, விளையாட்டு துறை அமைச்சர் இலங்கை வீரர்கள் அதிக எடையுடன் இருப்பதாக கூறியதாக அறிந்தேன்.

நாங்கள் 5 முறை உலக கோப்பை இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளோம். மலிவான விளம்பரத்துக்காக எதாவது சொல்கிறார்கள்.

அவர்கள் விளையாட்டுக்காக என்ன செய்தார்கள் என தாம் கேட்க விரும்புவதாக மலிங்க கூறியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சரை விமர்சிக்கும் வகையில் பேசியதாக மலிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் சபைக் குழு இன்று ஒழுங்குமுறை விசாரணை நடத்தவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.