மகனுடன் சேர்ந்து அக்கா, தங்கையை பலாத்காரம் செய்த ஆசாராம் : மீண்டும் சர்ச்சை!!

597

Asaram bapu

பல்வேறு ஆசிரமங்கள் நடத்தி வந்த ஆசாராம் சாமியார் மீது மேலும் ஒரு கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.

பல ஆயிரம் பேர் பின்பற்றி வந்த ஆசாராம் சாமியார் மீது கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு இளம்பெண் ஆசாராம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது ஜாமின் மனுக்களும் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 பெண்கள் சாமியார் மீது ஒரு புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரில் நானும் எனது தங்கையும் சாமியாரின் வழியை பின்பற்றி வந்தோம். ஆமதாபாத் ஆசிரமத்தில் வைத்து தன்னை சாமியார் பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

எனது தங்கையை சூரத்தில் சாமியாரின் மகன் நாராயண்சாய் கற்பழித்தார். இவர்கள் மீது புகார் கொடுக்க அச்சம் காரணமாக நாங்கள் காலம் தாழ்த்தினோம் என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூரத் பொலிசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் சாமியார் மகனும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருக்கும் அசராமுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.