சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைபற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி!!

647

CLT20 Final - Rajasthan Royals vs Mumbai Indians

சம்பியன்ஸ் லீக் தொடரின் பட்டதை நடப்பு இப்ல் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சுவீகரித்துக்கொண்டது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான ராகுல் ட்ராவிட் தனது இறுதி தொழில்முறை கிரிக்கெட் போட்டியிலும், மற்றொரு வீரரான சச்சின் டென்டுல்கர் தனது இறுதி டுவென்டி டுவென்டி போட்டியிலும் பங்குபற்றும் போட்டியாக அமைந்தது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக எந்தவொரு வீரரும் அரைச்சதத்தைப் பெற்றுக் கொள்ளாத போதிலும் அவ்வணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்மித், ரோகித் சர்மா, கிளென் மக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த பலத்தை வழங்கினர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பிரவீன் தம்பே மாத்திரம் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வேகமான ஆரம்பத்தைப் பெற முயன்ற போதிலும் குசால் பெரேரா 4வது பந்தில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், அதன் பின்னர் ரஹானே, சஞ்சு சம்சன் இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதன் பின்னர் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட தடுமாறிய அணி தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், பொலார்ட் இருவரும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஹர்பஜன் சிங்கும், போட்டித் தொடரின் நாயகனாக டுவைன் ஸ்மித்தும் தெரிவாகினர்.