கோலிவூட் நடிகைகள் அதிகபட்சமாக 3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் கைவசம் படங்களே இல்லாத சார்மி 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. டோலிவூட் இயக்குநர் புரி ஜெகனாத்துடன் நல்ல புரிதலுடன் இருக்கிறார் சார்மி.
என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும், பைசா வசூல், 101 ஆவது படத்தை புரி இயக்குகிறார். இதன் பட்ஜெட் 32 கோடி. புரியின் சிபாரிசால் சார்மி படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பு பெற்றார். நடிகர், நடிகைகள் ஒருங்கிணைப்பு, படப்பிடிப்பு பணிகளை கவனித்தார் சார்மி.
இதன் படப்பிடிப்பு போர்த்துகல் நாட்டில் 70 நாட்கள் நடந்தது. இதற்கான பணிகளை கவனித்த சார்மிக்கு ரூ.4 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. 5 படங்கள் நடித்திருந்தால் கூட சார்மிக்கு இதில் பாதி அளவு சம்பளம் கூட கிடைத்திருக்காது.
ஆனால், சாதுர்யமாக நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்று பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். படத்தில் நடிக்காமலே இவ்வளவு பெரிய தொகையை சார்மி சம்பளமாக பெறுவதையறிந்து சக ஹீரோயின்கள் அதிர்ச்சியில் வாயடைத்துபோய் உள்ளார்களாம்.






