வவுனியா புதிய பஸ் நிலையம் ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்ற நிலையில்!!

560

வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது.

இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே.

195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது.

கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுை

இதனால் பஸ்கள் வீதியோரங்களில் நிறுத்தப்படுவதை இன்றும அவதானிக்க முடிகிறது.

195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.