வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே எனக் கதறும் உறவுகள்!!

941

 
வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இப் போராட்டம் இன்றுடன் (23.07.2017) 150 நாளை எட்டியுள்ள நிலையில் தமக்கு நீதி கோரி வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தினர்.

​காலை 11.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கந்தசாமி கோவில் முற்றலில் இருந்து நடைபவணியாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து அவர்களின் போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.

நடைபவணியின் போது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாயொருவர் வீதியில் உருண்டு கதறி அழுவதை காணக்கூடியதாக இருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.​