பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் Umer Wadda. இவர் அங்குள்ள Ashfaq என்பவரின் சகோதரியை கடந்த ஜுலை மாதம் 16-ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் இது தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள ஊர்பஞ்சாயத்து தலைவர்கள் சார்பில் பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தலைவர்கள் Umer Wadda-வின் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்யும் படி தீர்ப்பு வழங்கியுள்ளனர். Umer Wadda-வின் சகோதரிக்கு 16-வயது அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த Umer Wadda-வின் குடும்பத்தினர் பஞ்சாயத்து தலைவர்களிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்களோ இது போன்ற செயலுக்கு பழிக்கு பழி தான் சரி என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினர் முன்னரே அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அக்கிராமத்திற்கு விரைந்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 30 பேரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வழக்கை சமரசம் செய்ய இயலாதவாறு, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.






