குடிவெறியில் நண்பனின் காதை கடித்து துப்பிய விபரீதம்!!

725

ear

மும்பையில் நண்பர்களுடன் மது அருந்தி நேரத்தை செலவழிக்க சென்ற ஒரு நபரின் காதை குடிவெறியில் இருந்த அவரது நண்பர் வெறித்தனமாக கடித்து துப்பியுள்ளார்.

கல்யான் பகுதியை சேர்ந்தவர் சுஷில் ஜாதவ் இவர் அவரது நண்பர்களோடு மது அருந்த சென்றிருந்தார். சுஷிலின் நண்பர்களான கேத்தான் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே குடி வெறியில் இருந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது சண்டையாக மாறியது.

சுஷில் வீட்டிற்குள் நுழைந்தபோது அவரது நண்பர்கள் இருவரும் பயங்கரமாக சண்டையிட்டுகொள்வதை பார்த்த சுஷில் திடுக்கிட்டார். உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த எண்ணிய அவர் ராகேஷை பிடித்தார்.

அதுவரை கேத்தானை தாக்கிக்கொண்டிருந்த ராகேஷ், ஆத்திரத்தில் சுஷிலை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். பின்பு அவரை உடல் முழுவதும் கடித்து, காதையும் வெறித்தனமாக கடித்து துப்பியுள்ளார்.

மற்றொரு நண்பர் குடிவெறியில் இருந்ததால் சுஷிலை காப்பாற்ற யாருமில்லை. உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சத்குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷில், தன்னை அடித்ததாக ராகேஷ் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.