மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மொட்டையடித்த கும்பல்!!

652

வங்கதேசத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவரை மொட்டையடித்த வழக்கில் தொடர்புடைய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கில் கைதான நபர்களில் வங்கதேச ஆளும் கட்சியான அவாமி லீக்கின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த டுஃபான் சர்கெரும் ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தின் போக்ரா பகுதியில் தாயும் அவரது 16 வயது மகளும் தனியாக இருந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பலொன்று திடீரென்று புகுந்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.

மட்டுமின்றி அந்த தாயாரை கட்டிப்போட்டுவிட்டு மகளை அந்த கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் இருவருக்கும் மொட்டையடித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோர் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் காவல்துறையினரின் பாதுகாப்போடு இருக்கும் புகைப்படங்கள், இணையதளத்தில் வேகமாக பரவி வங்கதேச மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.

பாதிக்கப்பட்ட, அடையாளம் வெளியிடப்படாத அந்த மாணவிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சர்கெரின் மனைவி சந்தேகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவியை பாலியல் வல்லுறவு செய்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் 25 வயதான சர்கெரின் மீது போக்ரா மாவட்ட காவல்துறையினர் கடந்த வெள்ளியன்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக மற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சர்கெரின் மனைவியான ஆஷா காடுன் என்பவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.