இந்தியாவில் கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்!!

667

kidnap

இந்தியாவின் தமிழ் நாட்டில் இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்தியாஸ் எனப்படும் வர்த்தகரே இவ்வாறு இனந்தெரியாத குழுவால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

செவன் வோல்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வர்த்தகர் கடத்தப்பட்டதாகவும் வர்த்தகரின் மனைவியிடம் கடத்தல் காரர்கள் 1 கோடி ரூபா கப்பம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றதால் கடத்தல் காரர்கள் வர்த்தகரை காலையில் கடத்தி மாலையில் விடுதலை செய்துள்ளனர்.

சடயப்பா வீதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த போது நான்கு பேர் கொண்ட குழு கதவை தட்டி வர்த்தக உடன்படிக்கை குறித்து கலந்துரையாட வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றதாக மொஹமட் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னை அவர்கள் தாக்கி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இலங்கை சென்றிருந்த தனது மனைவி இனுர் ரசாக்கிற்கு அழைப்பை ஏற்படுத்தி ஒரு கோடி ரூபா கப்பம் கோரியதாகவும் மொஹமட் இம்தியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அன்றைய தினம் மாலை மனைவிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மொஹமட் இம்தியாஸ் தான் விடுவிக்கப்பட்ட செய்தியை தெரிவித்து வாகனம் ஒன்றில் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசேட பொலிஸ் குழு அமைத்து விசாரணை இடம்பெறுவதாக செவன் வோல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.