குட்டி யானைக்கு மதம் பிடித்ததால் ஆணும் பெண்ணும் பலி!!

773

ele

புசல்லாவ – மொரப்பே – கதிர்காமம் தேவாலயத்தில் இடம்பெற்ற பெரஹராவின் போது குட்டி யானை ஒன்றுக்கு மதம் பிடித்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரஹராவை காண வந்தவர்களில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் குழப்பத்தில் ஓடி விழுந்தபோது யானைக் குட்டி அவர்களை காலால் நசுக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்பளை வைத்தியசாலையிலும் ஆணின் சடலம் கொத்மலை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.