இலங்கையில் விரைவில் பொலித்தீன் தடைச்­சட்டம் அமுலில்!!

671

பொலித்தீன் பாவ­னை­யை ­கட்­டுப்­ப­டுத்தும் வித­மாக கொண்டு வரப்­பட்­டு ள்ள சட்­ட­வி­திகள் கட்­டா­ய­மாக அமுல் படுத்­தப்­படும் என சுற்­றாடல் பிரதி அமை ச்சர் அனு­ராதா ஜய­ரட்ன தெரி­வித்தார்.

கண்டி ஈ.எல்.சேனா­நா­யக்கா சிறுவர் நூல­கத்தில் இடம் பெற்ற நிகழ்­வொன் றில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக் கும் போதே அவர் இதனை குறிப்­பிட் டார்.

சுற்­றாடல்  மற்றும் சூழ­லியல் பாதிப்­புகள் தொடர்­பாக பாட­சாலை மாண­வர்­களை அறி­வூட்டும் நிகழ்வில் மத்­திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்­க­நா­யக்க மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்க உட்­பட இன்னும் பலர் கலந்­து­கொ­ண­டனர்.  பிரதி அமைச்சர் அனு­ராதா ஜய­ரட்ன  தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

சுற்­றா­டலை பாது­காப்­ப­தற்­காக  மேற்­கொள்­ளப்­படும் சகல முடி­வு­களும் எச்­சந்­தர்ப்­பத்­தி­லேனும்  பின்­வாங்கும் நிலைக்கு உள்­ளா­காது.

சுற்­றாடல் பாது­காப்பு தொடர்­பாக அர­சுக்கு பல்­வேறு தடைகள் உரு­வான போதும், பொலித்தீன் மற்றும் எஸ்­பெஸ்ட்டோஸ் பாவனை தொடர்­பாக எவ்வித தளர்வும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது.

கடந்த காலங்­களில் சுற்­றாடல் தொடர்­பாக நாம் பல்­வேறு முடி­வு­களை எடுத் தோம். இருப்­பினும் அவை அனைத்தின் பின்­னாலும் பாரிய வர்த்­தக முத­லீட்­டா­ளர்கள் இருந்­தனர். அவர்கள் பாரிய முத­லீ­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். இதனால் நாம் எடுத்த முடி­வு­களை மீள் பரி­சீ­லிக்க வேண்டி ஏற்­பட்­டது.

பொலித்தீன் பாவனை தொடர்­பான தடைச்­சட்டம் 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்­டு­களில் சட்­ட­மாக்­கப்­பட்­டது. ஆனால் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல்போனது. கட்­டு­காஸ்­தோட் ­டையில் கொஹா­கொடை என்ற இடத் தில் குப்­பை­களால் பாரிய குன்­றுகள் உரு­வாகும் வரை எம்மால் பொலித்­தீனைத் தடை செய்ய முடி­யாது போனது. எஸ்­பெஸ்டோஸ் பாவ­னை­யிலும் இதே வித­மான நிலையே உரு­வா­னது.

இப்­ப­டி­யான துறை­களில் முத­லீடு செய்­த­வர்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் அவர்­க­ளுக்கு ஏதும் சலுகை வழங்கி மேற்­படி கைத்தொழிலை தடை­செய்ய அரசு திட் ­ட­மிட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு மாற்று வழி­ களை காண்­பிக்க உள்ளோம்.

தற்­போது நாட்டில் சுற்­றாடல் பிரச்­சி­னைகள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ள­தாகக் கூறப்­பட்­டாலும் கடந்த காலத்­திலும் இதே நிலைமை காணப்­பட்­டது.

தற்­போது ஜனா­தி­ப­தி­யிடம்  சுற்­றாடல் தொடர்­பான விடயம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளதால் அவரால் மட்டும் அதனை மேற்­கொள்ள முடி­யாது என்ற வகையில் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளையும் தெளி­வு­ப­டுத்­தி­வ­ரு­கின்றோம். அதில் ஒரு அங்­க­மா­கவே எமது எதிர்­கால தலை­வர்கள் என்ற வகையில் பாட­சாலை மாண­வர்­களை தெளி­வு­ப­டுத்தும் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.  2018 ஆகும் போது எஸ்பெஸ்டோஸ் தடையும் இதே வருடம் செப்டெம்பரில் பொலித்தீன் தடையும் அமுல்படுத்தப்படும். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சகல சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படும் என்றார்.