திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை, தன்னுடன் விடுதியில் தங்க வைத்திருந்த சிறுவனொருவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாலையூற்று பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனையே எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், சிறுமியை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல், சிறுமியை தனது விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரின் நண்பர்கள் மூலம் குறித்த விடுதியை பொலிஸார் கண்டுபிடித்து, இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






