15 கிலோ கஞ்சாவுடன் பருத்தித்துறையில் ஒருவர் கைது!!

534

arrest1

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வந்த ஒருவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – வெற்றிலைக்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி கடற்படையினரால் குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 15 கிலோ 346 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உடுத்துறை வடக்கு – தாழையடி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கஞ்சாவுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.