டெங்கு நுளம்பு பரவ துணைபோன 6086 பேர் மீது நடவடிக்கை!!

619

dengu

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 6086 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் 2 லட்சத்து 58,000 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் 4395 இடங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக டெங்கு பரவும் வகையில் சுழலை வைத்திருந்த 890 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.