
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் நேற்று திங்கட்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவை சேர்ந்த 40 பேர் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கைக்கு விமான மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டோர் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 சிறுவர்கள், 25 பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருமாக 40 பேர் உள்ளடங்குவர்.
ஒருவருக்கு தலா 20 இலட்சம் ரூபா செலுத்தி முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு படகு மூலம் சட்டவிரோதமாக இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.





