டுபாயில் செவ்வாய் கிரகம் : மனிதர்களைக் குடியேற்ற முயற்சி!!

658

 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ பயிற்சி அழிக்கும் வகையில் துபாயில் மாதிரி கிரகம் உருவாக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில பன்னாட்டுத் தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய குடியிருப்புக்களை அமைத்து அங்கு மனிதர்களை குடியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது இத்தகைய நடவடிக்கையில் ஐக்கிய அரபு இராச்சியம் கடும் முனைப்புடன் இறங்கியுள்ளது.

இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி கிரகம் உருவாக்கப்படுகிறது. இதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் இராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது.

இது துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக இலங்கை மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபா செலவிடப்படுகிறது.