கம்போடியாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையடித்த இலங்கையர் கைது!!

640

கம்போடியா நாட்டில் ஏ.டி.எம் இயந்திரத்தில் போலி அட்டையை பயன்படுத்தி பணம் மோசடி செய்த இலங்கையர் ஒருவரும், இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்நாட்டின் ப்னொம் பென் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெருந்தொகையான பணமும், போலி ஏ.டி.எம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகாலை வேலையில், போலியான அட்டைகளை பயன்படுத்தி மோசடியான முறையில் பணம் எடுக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.