புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் 49 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அமிர்தலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தரம் 5 புலமைப்பரீட்சையில் 182 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 49 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 88 மாணவர்கள் 100க்கும் 153க்கும் இடையே பெறுபேற்றினையும் 35 மாணவர்கள் 70க்கும் 100க்கு இடையே பெறுபேற்றினையும் 10 மாணவர்கள் 70க்கு குறைவான புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
சோபிகா தர்மராசா 186புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாவது இடத்தினையும் சிவதாசன் தேனுஷன் 179 புள்ளிகளையும் செபமாலை தரணீதரன் 177 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமையினை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.