புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் கலையகன் 175புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 45வது இடத்தினை பெற்றுள்ளதாக பாடசாலையில் அதிபர் எஸ். வஸ்சியம்பிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
64 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 8மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 32 மாணவர்கள் 100க்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.