வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு!!

365

 
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (09.10.2017) காலை 11.30 மணிக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் கதாநாயகர்களாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு மாணவர்கள், பழையமானவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் நடனம் நிகழ்வு இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.