காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் கதாநாயகனாகிறார்!!

279

Jeyamaniதிருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் ஆகியோருடன் சேர்ந்து நடித்தவர் ஜெயமணி. இவர் காமெடியனாக இருந்தாலும் தன்னுடைய மகனை கதாநாயகனாக உருவாக்கியுள்ளார்.

இவருடைய மகன் வர்ஷன் அது வேற இது வேற என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தில் கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். இவருக்கு ஜோடியாக சானிய தாரா நடக்கிறார்.

இப்படத்தை சுந்தர்.சி.யின் உதவியாளரான திலகராஜன் என்பவர் இயக்குகிறார். நடிகர் வர்ஷன் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மாஸ்டர்களிடம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் கற்றுக் கொண்டுள்ளார். கூத்துப்பட்டறையில் நடிப்பும் கற்று தேர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து வர்ஷன் கூறும்போது அது வேற இது வேற முழு நீள நகைச்சுவை படம். காமெடி கதைகள் கண்டிப்பாக ஜெயிக்கும், மக்கள் மனதில் நீங்க இடம்பெறும் என்பதால் காமெடி படத்தில் கதாநயாகனாக அறிமுகமாகியுள்ளேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாநாயகனாக நடிக்க தயாராகி வருகிறேன் என்று அவர் கூறினார்.

வர்ஷனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது குறித்து ஜெயமணி கூறும்போது என் மகன் வர்ஷன் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து முடித்தார். ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.

ஆனால் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தார். நான் காமெடியனாக இருந்தாலும், என் மகன் கதாநாயகனாக அனைத்துத் தகுதிகளுடன் இருந்ததால் கதாநாயகனாக்கி விட்டேன் என்றார்.