அஜித், கார்த்தி படங்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா??

480

ajithஅஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. இப்படங்கள் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘U’ சான்றிதழ் அளித்துள்ளார்கள்.

இதனால் இவ்விரு படங்களுக்கும் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு வரும் இன்னொரு படமான விஷாலின் பாண்டிய நாடு தணிக்கை குழுவினருக்கு திங்கட்கிழமை திரையிட்டு காட்டப்படுகிறது.

அப்படமும் ‘U’ சான்றிதழ் பெற்றால் வரி விலக்குக்கு தகுதி பெறும். பாண்டிய நாடு படம் குடும்ப பாங்கான கதையம்சத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று படங்களும் வரிவிலக்கோடு வந்தால் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர். மூன்று படங்களுக்கும் தியட்டர்கள் ஒதுக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

ஆரம்பம் படம் தீபாவளிக்கு இரண்டு நாளுக்கு முன்னதாக 31ம் திகதி வெளியாகின்றது. பாண்டிய நாடு படம் 1ம் திகதி வருகிறது.