மதுபானக்கடை சுவற்றில் துளைபோட்டுத் திருடிய தம்பதியர்!!

495

thefமதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடிய கணவன்-மனைவி குடிவெறியில் urangiyapothu பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட கொண்டுள்ளனர். இது பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார்.

அப்போது கடையின் சுவரில் துளைபோட்டு 20 ஆயிரம் மதிப்புள்ள மது போத்தல்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 அடி தூரத்தில் மது போத்தல்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு வைத்தபடி ஆண்-பெண் இருவர் தூங்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பொலிசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தலைக்கு மதுபான மூட்டையை வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை சேர்ந்த விஜயன் (35), அவரது மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது..

நேற்று முன்தினம் இரவு 2 பேர் எங்களிடம் வந்து ஒரு கடையின் சுவரில் துளைபோடவேண்டும் என தெரிவித்தனர். நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். நள்ளிரவில் அவர்கள் எங்களை கூட்டிச்சென்றனர். அப்போது துளைபோடுவதற்கு தேவையான கடப்பாரையை எடுத்துச்சென்றோம். சுவரை துளைபோட்டபின்னர் தான் அது டாஸ்மாக் மதுக்கடை என்பது தெரியவந்தது.

துளைபோட்ட வழியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 1400 மட்டும் இருந்தது. பெரிய அளவில் பணம் ஏதும் இல்லை. அதை தொடர்ந்து அங்கிருந்த குவாட்டர் மது போத்தல்களை கடையில் இருந்த 2 சாக்குப்பைகளில் அள்ளிப்போட்டு கட்டினோம்.

அதில் ஒரு சாக்குமூட்டையை எங்களை அழைத்துச் சென்றவர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு மதுபாட்டில் அடங்கிய மூட்டையை எங்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

நாங்கள் இருவரும் அந்த சாக்குமூட்டையை தூக்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றோம். பின்னர் சற்று மறைவான இடத்துக்கு சென்று அந்த மூட்டையை பிரித்து அதில் இருந்த 2 குவாட்டர் போத்தல்களை எடுத்து குடித்தோம். அப்போது போதை ஏறியது.

இதனால் சிறிது நேரம் தூங்கிவிட்டு விடிவதற்கு முன் எழுந்து சென்று விடலாம் என நினைத்து தலைக்கு மது போத்தல் அடங்கிய மூட்டையை வைத்து இருவரும் தூங்கினோம். இரவு முழுக்க கண் விழிப்பு மதுபோதை இவற்றால் பொழுது விடியும் வரை தூங்கி விட்டோம். அயர்ந்த தூக்கத்தால் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டோம் என்று அவர்கள் கூறினர்.

அதை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்தனர். மேலும் அவர்களை அழைத்து சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.