வவுனியா வேப்பங்குளம் தீவிபத்து சம்பவம் தொடர்பாக மக்கள் சிலரின் கருத்துக்களை நிராகரித்த நகரசபை செயலாளர்!

529

வவுனியா வேப்பம் குளத்தில் அமைந்துள்ள இரும்பகம் (Hardware ) இல் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தைக்கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொண்டுவந்திருந்த தண்ணீர் பவசரில் முழுமையாக தண்ணீர் இருக்கவில்லை அப்படி இருந்திருந்தால் தீ பரவுவதை வேகமாக தடுத்திருக்கலாம் என அப்பகுதியில் நின்ற சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் நகர சபை தலைவரிடம் கேட்டபோது.

தீ அணைப்பு பவுசரில் தண்ணீர் போதியளவு நிரப்பியே வைக்கப்பட்டுள்ளது. இதை எவர் வேண்டுமானாலும் வந்து பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அடிக்கடி தண்ணீர் மாற்றி வைக்கப்பட்டு வருகின்றது. எமது தீ அணைக்கும் பவுசரில் 4 ஆயிரம் லீற்றர் தண்ணீரையே சேகரிக்கமுடியும். ஒரு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றால் உடனடியாக அங்கு சென்று தண்ணீரைப் பீச்சி அடிக்கும் போது 10 நிமிடத்தில் 4 ஆயிரம் லீற்றர் தண்ணீரும் முடிந்துவிடும். திரும்பி மீண்டும் சென்று தண்ணீர் நிரப்பிக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும். எம்மிடம் ஒரே ஒரு தீ அணைக்கும் பவுசரே உள்ளது அதை வைத்துக்கொண்டே நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தை நான் நேரில் சென்று அவதானித்த போது எமது பணியாளர்கள் கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அங்கு ரின்னர் வர்ணப் பொருட்கள் என்பன காணப்பட்டது இதன் காரணமாக தீயைக் கட்டுப்படுத்தப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.



வியாபார நிலையத்துக்குள் எவரும் செல்ல முடியாத நிலையில் தீ அணைக்கும் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தீயைநோக்கித் தமது உயிரையும் துச்சமென மதித்துச் சேவை மேற்கொண்டுவருவதை நான் அவதானித்துள்ளேன். அவர்கள் அவ்வாறு செயற்படும் போது பொதுமக்களின் கருத்துக்கள் , குற்றச்சாட்டுக்கள் எமக்கு கவலையளிக்கின்றது என்றார்.