மாநாட்டில் கனடா பங்கேற்க வேண்டும் : கனடிய முன்னாள் பிரதமர் வேண்டுகோள்!!

525

Mulroneyஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி அதனை வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளை ஏனைய நாடுகள் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளி நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனடிய பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதை கனடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி நினைவுபடுத்தியுள்ளார்.

இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து விலகி 1990 ஆண்டு நிறைவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனடா இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.