வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பும்!!

690

 
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஐயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (09.12.2017) காலை 11 மணியளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களுக்கும் வவுனியா மாவட்ட குருசாமி மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.