சினிமா பயணத்தில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.
தற்போது வேலைக்காரன் படத்தில் நயன்தாரா, பொன்ராம் படத்தில் சமந்தா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அண்மையில் வேலைக்காரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் பொன்ராம் படத்தை பற்றியும் கேள்வி கேட்டனர்.
அப்போது அவர் நானும், சூரியும் நடித்துக் கொண்டிருக்கும் போது சமந்தா எங்களை பார்த்து கடுப்பாகிவிட்டார். ஏனெனில் உங்கள் இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது, இதில் நாயகியாக நான் என்ன செய்ய போகிறேன் என அவர் வருத்தப்பட்டதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.






