DD விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு!!

932

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி (வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்வதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.