வவுனியா திருஞானசம்பந்தன் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

823

 
வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் உள்ள கணவன் கைவிட்டுச்சென்ற நிலையில் கூலித்தொழில் செய்து பிழைக்கும் திருமதி சுரேஸ்குமார் சுகந்தினியின் குடும்பத்தில் உள்ள நன்றாக கற்கக்கூடிய 3 பிள்ளைகள் கற்றல் உபகரணங்கள் இல்லாமை மற்றும் பிள்ளைகளின் சீருடை தைத்து எடுப்பதற்கு பணம் இல்லாத நிலையில் பாடசாலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தாயார் மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டபோது லண்டன் V3 அமைப்பினர் ஊடாக நேற்று 08.01.2018 திங்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இது பற்றி கருத்து வெளியிட்ட பாடசாலை அதிபர் இப்பாடசாலையில் இவ்வாறான வறுமைப்பட்ட பிள்ளைகள் பலர் கற்று வருவதால் எதிர்காலத்தில் பல உதவிகளை மாணவர்கள் வேண்டி நிற்பதாக குறிப்பிட்டார்.