கண்ணீர் மழையால் நனைந்த வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி!

1144

vav

வவுனியா சைவப்பிரகாச பாடசாலையின் உப அதிபர் பானுமதி சிவசோதிநாதனின் இறுதிக் கிரியைகள் சைவபிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் உப அதிபர் பாநுமதி சிவசோதிநாதன் அவர்கள் கடந்த 11ம் திகதி இறைத்துவம் அடைந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக இப் பாடசாலையில் விஞ்ஞானத்தை போதித்து உப அதிபர் தரத்திற்கு உயர்ததுடன் மாணவர்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பெற்றிருந்தார்.

திடீர் என இவ் ஆசிரியர் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பாடசாலை சமூகம் இன்று தமது கண்ணீர் மழைகளுடன் இறுதி விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக பட்டானிசூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிகிரியைகள் இடம்பெற்று வவுனியா சைவபிரகாச பாடசாலை பெற்றோர் ஆசிரிய சங்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆசிரியரியரை ஊர்வலமாக வவுனியா சைவபிரகாச பாடசாலைக்கு பான்வாத்திய அணிவகுப்புடன் எடுத்து வந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை மேற்கொண்டனர்

நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது பாடசாலை மட்டும் இன்றி வவுனியா நகரம் முழுவதும் சோகமயமாகியது.