வவுனியாவில் குளக்கட்டுப்பகுதியில் குப்பை வீசிய நபர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிப்பு!!

986

 
வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இன்று(20.01.2018) பிற்பகல் 3.30 மணியளவில் குப்பை கொட்டுவதற்குச் சென்ற நபரை அங்குள்ள பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளம் குளக்கட்டுப்பகுதியில் குளத்தை அண்டிய பகுதியில் மீன்கழிவுகளை பொதி செய்து மோட்டார் சைக்கிலில் எடுத்து வந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நபரை அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் துரத்திப்பிடித்து விசாரணை மேற்கொண்டபோது குறித்த மீன் கழிவுகளை தோணிக்கல் பகுதியில் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் ஒருவருடையது என்றும் அவரே இக்கழிவுகளை கொண்டு வீசுமாறும் அதற்கு கூலி தருவதாகத் தெரிவித்திருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பண்ணடாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று கழிவகளை வீசிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட நபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் பிள்iயார் ஆலயம் உள்ளதுடன் வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றதுடன் நேற்றும் இப்பகுதியில் பெண் ஒருவருடைய தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சிலர் மோட்டார் சைக்கிலில் தலைமறைவாகியுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.