ரயிலிலிருந்து கீழே விழுந்து இளம் நடிகர் மரணம்!!

555

மும்பையில் ரயிலிலிருந்து கீழே விழுந்து இளம் நடிகர் உயிரிழந்துள்ள நிலையில் அது விபத்தா அல்லது தற்கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மராத்தி மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரபுல் பலிரோ (22). இவர் திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

ரயிலானது மும்பையின் மலாட் ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்து பின்னர் புறப்பட்டது. ரயில் புறப்பட்ட போது படிக்கட்டில் தொங்கியபடி இருந்த பிரபுல் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தார்.

படுகாயங்களுடன் கிடந்த பிரபுலை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பிரபுலின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரபுல் அவ்வளவு அதிகாலை ஏன் ரயிலில் சென்றார் மற்றும் ரயிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தில் குதித்தாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

பிரபுலின் மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.