சின்னத்திரை நடிகை நந்தியினியின் கணவர் கார்த்திகேயன் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர், இறப்பதற்கு முன்னர் தற்கொலைக்கு தனது மாமனார் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார்.
இதனால் நந்தியினியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நந்தினியின் மீதும் கார்த்திகேயனின் நண்பர்கள் சில குற்றங்களை சுமத்தியதால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள இவர் இழப்பு என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் கொடுமையான ஒன்று, எனது கணவர் இறந்தது எனக்கு இழப்பு தான். ஆனால், அதனை நினைத்துக்கொண்டு எனது குடும்பத்தை கைவிட முடியாது. எனது பெற்றோரை இரண்டு கண்களாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது, அந்த பொறுப்பும் எனக்கு இருக்கிறது.
நடிப்புதுறையில் இருக்கும் எனக்கு எனது நடிப்பு தொடர்பான குறைகளை மட்டும் சொல்லுங்கள், அதனை தவிர்த்து எனது சொந்த விடயங்களில் தலையிட வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டேன், அடுத்த திருமணநாள் வருவதற்கு முன்னரே எனது கணவர் இறந்துவிட்டார். நான் அவருக்கு மிகவும் உண்மையாக இருந்தேன். ஆனால் அவர் எனக்கு உண்மையாக இல்லை. இப்போது கூட எனக்கு பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
எனது தம்பி ஒரு டான்ஸர் நான் அவனோடு சென்றால், நந்தினி ஒரு டான்ஸரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. அப்படியென்றால் பார்ப்பவர்களின் பார்வை தவறாக இருக்கின்றது.
தம்பியை கூட தவறாகத்தான் பார்க்கிறார்கள், ஆனால் அதனை நான் கண்டுகொள்ளப்போவதில்லை என கூறியுள்ளார்.






