வவுனியா – நொச்சிமோட்டை பாலம் முழுமையாக சீரமைக்கப்படும் வரை பயணிகளும், வாகனச் சாரதிகளும் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி பாலம் உரியவகையில் சீராக்கப்படாமையினால் எந்நேரமும் விபத்து நேரிடும் அபாயமுள்ளது. இப்பாலம் அடிக்கடி சேதடைகிறது. இதுகுறித்து பொதுமக்கள் முறையிடும் போது குறித்த பாலத்தின் சேதமடையும் துண்டம் பாலத்தின் இன்னொரு பகுதிக்கு மாற்றிப் பொருத்தபடுகிறது.
இதனால் பாதிக்கப்படுவதும் அச்சப்படுவதும் பயணிகளும் சாரதிகளுமே. பாலத்தை முழுமையாக சீராமைக்காமல் அவசரத்துக்கு துண்டத்தை மாற்றுவதையே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் எந்நேரமும் பயணிகளும் சாரதிகளும் ஆபத்தை சந்திக்க நேரிடலாம். குறித்த துண்டத்துக்கு அருகினாலேயே வாகனங்கள் செல்லவேண்டும். அவதானமாக பயணிக்குமாறு காவல் கடமையில் உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை முழுமையாக பாலத்தை சீரமைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






