வவுனியாவில் இப்படியும் மோசடி : பாதிக்கப்பட்டவர் பொலிசில் புகார்!!

950

வவுனியாவில் பிரபலமான புடவைக்கடையை நடத்திவரும் வர்த்தகர் ஒருவரிடம் சென்ற பிரபல காப்புறுதி நிறுவனத்தின் முகவர் ஒருவர் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு ஆயுட் காப்புறுதி பெற்றுத்தருவதாகவும், பல அனுகூலங்களுடன் ஒரு தொகை வைப்பிலிடப்பட்டால் பில்லியன் கணக்கில் பெறமுடியும் என்று தெரிவித்து மூளைச்சலவை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த வர்த்தகரும் மனைவியின் பெயரில் ஆறு இலட்சம் ரூபாவிற்கு நிரந்தர வைப்பு காப்புறுதி ஒன்றினைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டு இலட்சம் ரூபாவாக அப்பணத்தை மூன்றாகப்பிரித்து செலுத்தியுள்ளார்.

இதையடுத்து சில தினங்களின் பின்னர் வர்த்தகருக்கு காப்புறுதிப்புத்தகம் ஆங்கில மொழியில் வழங்கப்பட்டுள்ளது. காப்புறுதி முகவரின் நம்பிக்கையின் நிமித்தமும் வவுனியாவில் வசித்து வருவதையும் புரிந்துகொண்ட வர்த்தகர் புத்தகத்தினை சந்தேகத்துடன் பார்வையிடாது வைத்துள்ளார்.

எனினும் சில காலமாகியதால் அப்பணத்தினை ஒரு தேவையின் நிமித்தம் திரும்பப்பெற்றுக்கொள்வதற்கு குறித்த காப்புறுதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது தான் குறித்த வர்த்தகருக்குத் தெரியவந்தது தன்னால் வழங்கப்பட்ட ஆறு இலட்சம் ரூபாவும் காப்புறுதி நிறுவனத்தில் வைப்புச் செய்யப்படவில்லை தனக்கு வழங்கப்பட்ட காப்புறுதிப்புத்தகத்தில் அப்பணம் வைப்புச் செய்யப்படவில்லை என்று.

அங்கிருந்து முகவருடன் தொடர்புகொண்டபோது அவர் அந்நிறுவனத்தில் பணியிலிருந்து விலகியதும் தெரியவந்துள்ளதுடன் குறித்த முகவரும் வழங்கிய பணத்திற்கு பொறுப்பேற்றகவில்லை நிறுவனமும் கைவிரித்துள்ளது.

இதையடுத்து குறித்த வர்த்தகர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றுவரையில் அவர்களிடமிருந்து பதிலேதும் கிடைக்காத நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கத்திலும் இதன் நிலைமைகளைத் தெரிவித்து சங்கத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

இன்று வரையில் சங்கமும் பொலிசாரும் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துடன் இவ்வாறு ஒரு நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி மோசடி இடம்பெற்றுள்ளது இதற்கு குறித்த நிறுவனம் அங்கு பணியாற்றிய முகவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் தக்க பதிலினை பெற்றுத்தருமாறு வர்த்தகர் கோரியுள்ளார்.


வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..