உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதக்  கொடுப்பனவு எவ்வளவு தெரியுமா?

521
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகிய உறுப்பினர்களுக்கு 15000 ரூபா மாதக் கொடுப்பனவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சலுகைகள் வரப்பிரசாதங்களை வழங்காது 15000 ரூபாவினை மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் சைக்கிள், செல்லிடப்பேசி கொடுப்பனவு, பெக்ஸ் இயந்திரங்கள் போன்றன வழங்கப்படாது என உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு செல்லிடப் பேசி உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தேவை என்றால், உள்ளுராட்சி ஆட்சி நிர்வாகத்தை சரியாக முன்னெடுத்து வரி வருமானத்தின் ஊடாக இவ்வாறான சலுகைகளைப பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உள்ளுராட்சி மன்றங்கக்காக 8700 உறுப்பினர்கள் தெரிவாகக் கூடும் எனவும் இவர்களுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு செய்ய நேரிடும் எனவும் தெரிவிக்கப்படகிறது.

உள்ளுராட்சி மன்ற அமர்வுகளை நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினால் மன்றங்களுக்கு சொந்தமான மண்டபங்கள் அல்லது நிதி இயலுமைக்கு பொருத்தமான வகையில் வேறும் இடத்தில் அமர்வுகளை தற்போதைக்கு நடத்த முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.