இரண்டு நாட்களுக்கு புகையிரத சேவை இடைநிறுத்தம்!!

743

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு களனிவௌி புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (16.02) இரவு 08 மணிமுதல் 19ம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் அந்த மார்க்கத்திலான புகையிரத சேவை இடைநிறுத்தப்படும் என்று புகையிரதப் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

எதிர்வரும் 19ம் திகதி முதல் வழமை போன்று மீண்டும் புகையிரத சேவை இடம்பெறும் என்றும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.