வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியை பகிர்ந்துகொள்ளவுள்ள இருவர்!!

1135

வவுனியா நகரசபையின் தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான சந்திப்பின்போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் நிமிர்த்தம் வவுனியா நகரசபைக்கு தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட நா.சேனாதிராஜாவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய போதனாசிரியரான தர்மலிங்கம் பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நகரசபையின் உப தவிசாளராக க.சந்திரகுலசிங்கம்(மோகன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.